உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் பாதிப்பால், இங்கிலாந்தில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 31 ஆயிரத்து 855 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட சமீபத்தில் தான் கரோனாவிலிருந்து மீண்டார்.
இதற்கிடையே, 2016ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட எக்சர்சைஸ் சிக்னஸ் (exercise Cygnus) என்ற ஆவணம் தற்போது கசிந்துள்ளது. அந்த 57 பக்க ஆவணத்தில், ''தேசிய, பிராந்திய மற்றும் உள்ளூர் வட்டங்களில் ஏதேனும் தொற்றுநோய் பரவினால் அதனை எதிர்கொள்ள இங்கிலாந்து தயாராக இல்லை.
பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ எமர்ஜென்சியின்போது ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான திட்டங்கள் இங்கிலாந்தில் உருவாக்கப்பட வேண்டும், சேவை செய்வதற்கான தேவையை அதிகரிக்க வேண்டும். சமூக பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான அளவிற்கு ஆதரவை வழங்க முடியுமா என்ற சந்தேகம் உள்ளது'' என தற்போது நிலவும் சூழல்கள் அனைத்தையும் இங்கிலாந்து அரசிற்கு அந்த ஆவணம் முன்கூட்டியே எச்சரித்துள்ளது.
இவையனைத்தும் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டும் இங்கிலாந்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் வெட்டி வீசப்படும் அமேசான் காடுகள்