கோவிட்-19 இரண்டாம் அலையில் சிக்கி இந்தியா தவித்துவரும் நிலையில், சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிவருகின்றன. பிரிட்டன் அரசு இந்தியாவுக்கு 600-க்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்புகிறது.
வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் போன்ற அத்தியாவசிய உபகரணங்களை அனுப்ப பிரிட்டன் முடிவெடுத்துள்ளது. முதற்கட்ட பொருள்கள் இன்று அதிகாலை இந்தியாவுக்கு விமானம் மூலம் வந்துசேர்ந்தன.
பிரிட்டனின் முக்கிய நட்பு நாடான இந்தியாவுக்கு இந்த இக்கடான சூழலில் துணை நின்று அனைத்து உதவிகளைச் செய்ய நாங்கள் முன்வருகிறோம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அஜித் தோவல் தலையீடு: தடுப்பூசி கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா