கோவிட்-19 பாதிப்பு தொடக்க காலத்தில் சீனாவின் வூஹான் மாகாணம் பேசுபொருளாகத் திகழ்ந்ததுபோல, தற்போது பிரிட்டனின் லண்டன் நகர் உருவெடுத்துள்ளது. அந்நாட்டில் உருமாறிய கரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்துவருவதால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை தற்போது உச்சம் தொட்டுள்ளது.
அங்கு நோய் பரவல் தொடக்க காலத்திலிருந்து இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 53 ஆயிரத்து 135 பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பிரிட்டனில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்து 82 ஆயிரத்து 865ஆக உயர்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை காலக்கட்டத்திலேயே இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், வரும் புத்தாண்டில் மக்கள் கூட்டம் ஏற்பட்டால் சமாளிக்க முடியாத வகையில் இதன் எண்ணிக்கை உயரும் என அந்நாட்டின் மருத்துவ நிபுணர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். எனவே, வரும் ஜனவரி, பிப்ரவரி காலகட்டத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
இதையும் படிங்க: கோவாக்சின் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்!