கரோனா வைரஸ் நோயால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பாதிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவரின் உடல்நிலை மோசமடைந்தது. இதனிடையே, வெஸ்ட் மின்ஸ்டரில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், ஐசியுவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கரோனாவுக்கு எதிரான இங்கிலாந்தின் நடவடிக்கைகள் அனைத்தும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் டொமினிக் ராப் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அவர் நலம்பெற்று விரைவில் குணமடைய வேண்டும் என உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.