லண்டனைச் சேர்ந்த ஊடகக் கண்காணிப்பு அமைப்பான ஆப்காம், ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான Peace TV-க்கு 10 ஆயிரம் பவுண்டுகளும், Peace TV உருது தொலைக்காட்சிக்கு 20 ஆயிரம் பவுண்டுகளும் அபராதம் விதித்துள்ளது.
இது குறித்து ஆப்காம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "Peace TV, Peace TV உருது ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள், வெறுக்கத்தக்கப் பேச்சுகளையும் பார்ப்பவர்களின் மனதைப் புண்படுத்தும் கருத்துகளையும் கொண்டுள்ளது.
பிரிட்டன் ஒளிபரப்பு விதிகளை அந்தத் தொலைக்காட்சி பின்பற்றவில்லை. இதனால் Peace TV-க்கு ஒரு லட்சம் பவுண்டுகளும், Peace TV உருது தொலைக்காட்சிக்கு இரண்டு லட்சம் பவுண்டுகளும் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான Peace தொலைக்காட்சி குழுமம் ஆங்கிலம், வங்காள மொழி, உருது ஆகிய மொழிகளில் இயங்கிவருகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு பிரிட்டன் நாட்டிற்குள் நுழைய ஜாகிர் நாயக்கிற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.
இந்தியாவில் பணமோசடி உட்பட பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஜாகிர் நாயக், 2016ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார். அவர் தற்போது மலேசியாவில் வசித்துவருகிறார். ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு மலேசிய அரசிடம் கடந்த வாரம் இந்தியா கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'எதிர்ப்பு சக்தி குறைவால் மீண்டும் கரோனா தாக்கலாம்' - எச்சரிக்கும் சார்ஸ் ஹீரோ