ETV Bharat / international

மிங்க் கீரி மூலம் கரோனா பரவல்: டென்மார்க்கிலிருந்து குடியேறியவர்களுக்கு இங்கிலாந்தில் தடை! - மிங்க் கீரி மூலம் கரோனா பரவல்: டென்மார்க்கிலிருந்து குடியேறியவர்களுக்கு இங்கிலாந்தில் தடை

லண்டன்: மிங்க் கீரி மூலம் பரவும் கரோனா அச்சம் காரணமாக, டென்மார்க்கிலிருந்து இங்கிலாந்தில் குடியேறுபவர்களை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.

UK bans non-resident arrivals from Denmark over mink fears

author img

By

Published : Nov 9, 2020, 9:27 AM IST

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் உலகின் 213-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் மனிதர்களைப் போலவே பூனை, சிங்கம், நாய், புலி ஆகிய விலங்குகளுக்கு பரவி, அது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டென்மார்க் நாட்டில் பண்ணைகள் மூலம் மிங்க் வகை கீரிகள் உணவுக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த பண்ணைகளில் வளர்க்கப்படும் கீரிகள் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இறைச்சி உணவிற்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், மிங்க் வகை கீரியிடம் கரோனா பரவி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. டென்மார்க்கில் உள்ள கீரி வளர்ப்புப் பண்ணையில் வேலை செய்பவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 214 பேருக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மிங்க் மூலம் பரவிய கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, மற்றவர்களைப் போல இல்லாமல் வைரஸின் வீரியம் மிகவும் அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மிங்க் கீரி மூலம் பரவும் கரோனா அச்சம் காரணமாக, டென்மார்க்கிலிருந்து இங்கிலாந்தில் குடியேறுபவர்களை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது. அதுமட்டுமின்றி கப்பல், விமானப் போக்குவரத்தில் கடுமையான விதிகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

இதையும் படிங்க...'நான் முதல் பெண் துணை அதிபராக இருக்கலாம்; ஆனால்...' - கமலா ஹாரிஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.