கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, ஐரோப்பியா ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இதனை (Britain + Exi = Brexit) பிரெக்ஸிட் என்று அழைக்கிறார்கள். இந்நிலையில், எல்லை தாண்டி வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில் பிரெக்ஸிட்டுக்கு பிறகான ஒப்பந்தத்தை பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இறுதி செய்துள்ளது.
பிரிட்டன் வெளியேறுவதால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்டும் வகையில் ஒப்பந்தத்தை மேற்கொள்ள கடந்த பத்து மாதங்களாக பிரிட்டன், ஐரோப்பியா ஒன்றியத்தின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒப்பந்தம் இறுதியாகியுள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
The deal is done. pic.twitter.com/zzhvxOSeWz
— Boris Johnson (@BorisJohnson) December 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The deal is done. pic.twitter.com/zzhvxOSeWz
— Boris Johnson (@BorisJohnson) December 24, 2020The deal is done. pic.twitter.com/zzhvxOSeWz
— Boris Johnson (@BorisJohnson) December 24, 2020
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் உர்சுலா வான் டெர் லேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இறுதியாக ஒப்பந்தத்தை மேற்கொண்டுவிட்டோம். நீண்ட கால பேச்சுவார்த்தையில் பல திருப்புமுனைக்கு பிறகு, ஒரு நல்ல ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் நியாயமான ஒற்றை சந்தையாக தொடரும்" என பதிவிட்டுள்ளார்.
இரண்டாம் உலக போருக்கு பிறகு, ஒற்றை கண்டமாக அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக தொடங்கப்பட்ட திட்டத்திலிருந்து (ஐரோப்பிய ஒன்றியம்) விலகும் முதல் நாடு பிரிட்டன் ஆகும்.