ETV Bharat / international

சவுதியில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது உறுதி- வெளியுறவுத்துறை

சண்டிகர்: சவுதியில் குற்றவழக்கில் கைதான இருவர் தூக்கிலிடபட்டது உறுதியென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.

மரண தண்டனை
author img

By

Published : Apr 17, 2019, 12:18 PM IST

சண்டிகரை சேர்ந்தவர் சர்விந்தர் குமார். இவரது மனைவியான சீமா ராணி கடந்த திங்கள் கிழமை சவுதிக்கு வேலைக்கு சென்ற தனது கணவர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை எனவும், கணவர் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்ற வெளியுறவுத் துறை அமைச்சகம் சர்விந்தர் சிங் குறித்து தகவலை சேகரிக்க சவுதியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிட்டது.

அதன்படி அந்நாட்டு தூதரகத்தை தொடர்புகொண்டு விசாரித்த போது சர்விந்தர் சிங் மற்றும் மற்றொரு இந்தியரான ஹர்ஜீத் சிங் ஆகிய இவரும் 2015ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி குற்ற வழக்கில் கைதாகி ரியாத் சிறையில் இருந்ததாகவும், 2017ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி இருவர் மீதும் குற்றம் நீருபணம் ஆனதால் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததாகவும் தெரிவித்தனர். மேலும் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி இருவரது தூக்குதண்டனையும் நிறைவேற்றப்ட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இறந்த இருவரது தகவல்களும் தெளிவாக இல்லாததால், இந்திய தூதரகத்திற்கு உரிய தகவல் அளிக்கமல் இருந்துள்ளனர். ஆகையால் விரைவில் இருவரது உடல்களையும் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Intro:Body:

https://timesofindia.indiatimes.com/india/two-indians-in-saudi-arabia-executed-for-murder/articleshow/68914707.cms

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.