ஜெர்மனியின் ரேன்ட்ஸ்பர்க் பகுதியில் டிரக் ஒன்று இன்று காலை ரயில் தண்டவாளத்தினை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தது. சிக்னல் மாறிய பிறகு டிரக் நகர்ந்ததால் எதிரில் வந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
20 பேருக்கு காயம் ஏற்பட்டு முதற்கட்ட சிகிச்சைக்கு பிறகு அவர்கள் அனைவரும் வீடு திரும்பினர். விபத்து ஏற்பட்டபோது 25 பேர் மட்டுமே ரயிலில் இருந்ததாக அரசு தரப்பு தகவல் தெரிவிக்கிறது. டிரக் ஓட்டுநர் விபத்து நடப்பதற்கு முன்பே லாவகமாக முயற்சித்து தப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.