ETV Bharat / international

பறவை காய்ச்சல் அச்சம்: 25 ஆயிரம் கோழிகளை கொல்ல உத்தரவு

author img

By

Published : Nov 17, 2020, 11:26 AM IST

டென்மார்க்கில் பறவை காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக சுமார் 25 ஆயிரம் கோழிகளை கொல்ல ஜூட்லாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் கால்நடை மற்றும் உணவு நிறுவனத்துறை தெரிவித்துள்ளது.

Thousands of chickens culled in Denmark as new bird flu outbreak emerges

கோபன்ஹாகன்: உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தலிலிருந்து மீள முயற்சி செய்துவரும் நிலையில் கடந்த சில வாரங்களாக ஜப்பான், ஐரோப்பா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பறவைக் காய்ச்சலையும் எதிர்கொண்டு வருகின்றன.

இதற்கிடையில் டென்மார்க்கிலுள்ள, ட்ரஸ்ட்ரப் பகுதிக்கு அருகிலுள்ள ரேன்டெர்ஸ் பகுதிகளிலுள்ள பறவைகள் ஹெச்5என்8 எனப்படும் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்டேடன்ஸ் சீரம் நிறுவனம் தெரிவித்தது.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்டுள்ள பறவைகளை கண்காணிக்க இரண்டு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றிற்கும் தற்போது கண்டறியப்பட்ட தொற்றிற்கும் வேறுபாடுகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் மனிதர்களை இதுவரை தாக்கியதாக எந்த ஆதாரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மிகவும் பாதிக்கப்பட்ட பறவைகளை உடனடியாக கொல்லுமாறு ஜூட்லாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் கால்நடை மற்றும் உணவு நிறுவனத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்த கருவி மூலம் பறவைக் காய்ச்சலை 20 நிமிடங்களில் கண்டுபிடிக்க முடியும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.