பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு மார்ச் 29ஆம் தேதி வெளியேறுவதற்கான முயற்சிகளை அந்நாட்டு பிரதமர் தெரெசா மே மேற்கொண்டுவருகிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தெரெசா மே பிரிக்ஸிட் ஒப்பந்தத்தை நாடாளுமன்ற எம்.பி.க்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், இரண்டு வாக்கெடுப்புகள் தோல்வியில் முடிவடைந்தன.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற 11 நாட்களே உள்ள நிலையில் மற்றுமொரு முறை பிரிக்ஸிட் வாக்கெடுப்பு நடத்த கன்ஸர்வேட்டிவ் கட்சி விரும்புகிறது.
இது குறித்து அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் நேற்று பேசுகையில், இரு முறைக்கு மேல் ஒரு மசோதா வாக்கெடுப்பில் தோற்றால், மேற்கொண்டு திருத்தம் செய்யாத வரை மீண்டும் வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க முடியாது என்றார்.