ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரிக்ஸிட் ஒப்பந்தங்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தல் நடந்த வாக்கெடுப்புகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தெரெசா மே ஒன்றியத்திடம் அனுமதி கோரவுள்ளதாக அவரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மார்ச் 29ஆம் தேதி வெளியேறுவதாக பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில் ஒப்பந்தத்தில் உள்ள குளறுபடிகளால் பிரிட்டன் எம்.பி.க்கள் வாக்கெடுப்புக்களில் பிரதமர் தெரெசா மேவின் ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை.
இதனால் மார்ச் 29ஆம் தேதி பிரிட்டன் வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து தெரெசா மே ஒன்றியத்திலிருந்து வெளியேற காலஅவகாசத்தை இரண்டாண்டுகள் வரை நீட்டிக்க கடிதம் எழுதவுள்ளதாக கூறப்படுகிறது.
காலஅவகாசத்தை நீட்டிப்பதால் எம்.பி.க்களின் ஆதரவைப் பெறமுடியும் என தெரெசா மே நினைப்பதாக அவரின் ஆதரவு எம்.பி.க்கள் தெரிவிக்கிறார்கள்.