மே 19ஆம் தேதி இரவு முன்னாள் அல்-கொய்தா கிளையாக இயங்கிய தாகிர்-அல்-ஷாம் குழுவுக்கும் சிரிய படைக்கும், இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் சிரியாவின் கூட்டணியான ரஷ்யா நேற்று இத்லிப் மகாணத்தின் கப்ரன்பல் நகரில் உள்ள ஜிகாதிகளின் கோட்டை மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதில் ஐந்து சிறுவர்கள், நான்கு பெண்கள், ஒரு ஆண் உள்ளிட்ட 10 பேர் பலியாகினர். மேலும் இந்தத் தாக்குதலில் ஐந்து வீடுகளும் தரைமட்டமானதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் தொடக்கம் முதல் பயங்கரவாதிகள் மீது அரசுப் படை, ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.