ETV Bharat / international

ஜுலியன் அசாஞ்சேவை ஒப்படைக்க ஸ்வீடன் மனு

author img

By

Published : May 20, 2019, 3:41 PM IST

லண்டன்: ஜுலியன் அசாஞ்சே மீதான பாலியல் வழக்கு தொடர்பாக அவரை ஒப்படைக்கக் கோரி ஸ்வீடன் அரசு பிரிட்டனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

julian assange

அமெரிக்க உளவுத்துறை உலக நாடுகளை ரகசியமாக வேவுப் பார்த்ததை, 2010ஆம் ஆண்டு, பொதுதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் ஒரே நாளில் பிரபலமானவர் விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே.

இதனிடையே, ஸ்வீடன் நாட்டில் அவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஜுலியன் அசாஞ்சே 2012ஆம் ஆண்டு பிரிட்டனில் கைது செய்யப்பட்டார். பின்னர், அதிலிருந்து பிணையில் வெளிவந்தார்.

இந்நிலையில், பாலியல் வழக்கு தொடர்பாக தன்னை ஸ்வீடன் நாட்டுக்கு நாடு கடத்த கூடாது என பிரிட்டன் அரசுக்கு அவர் அளித்திருந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், வேறுவழியின்றி ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சம் புகுந்தார். மேலும், அந்த தூதரகத்திலேயே கடந்த ஏழு ஆண்டுகளாக ஜுலியன் அசாஞ்சே வசித்துவந்தார்.

இதையடுத்து, ஈக்வடார் அரசுக்கும் ஜுலியன் அசாஞ்சேவுக்கும் இடையே மோதல் மூண்டதால், அவருக்கு தஞ்சம் அளிப்பதிலிருந்து ஈக்வடார் அரசு விலகிக்கொண்டது. இதனால், கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி, பிரிட்டன் காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டார்.

பின்னர், 2012ல் அவருக்கு அளிந்திருந்த பிணை நிபந்தனைகள் மீறியதாக 50 வாரங்கள் பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அசாஞ்சே மீதான பாலியல் வழக்கை மீண்டும் விசாரிக்கப்போவதாக சமீபத்தில் ஸ்வீடன் அரசு அறிவித்திருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஜுலியன் அசாஞ்சேவை சிறையில் அடைக்க, அவரை ஒப்படைக்குமாறு ஸ்வீடன் அரசு பிரட்டனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை பிரிட்டன் ஏற்றுக்கொண்டால், ஜுலியன் அசாஞ்சே நாடுகடத்தப்படுவார். அரசு ரகசியங்களை வெளியிட்டதற்காக அசாஞ்சேவை நாடு கடத்த அமெரிக்க அரசும் முயன்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.