ETV Bharat / international

பின்விளைவுகளை ஏற்படுத்துகிறதா அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி...பயன்பாட்டுக்கு தடைவிதிக்கும் ஐரோப்பிய நாடுகள்! - கொரோனா தடுப்பூசி

ஸ்டோக்ஹோம்: அஸ்ட்ராஜெனெகா மருந்து நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்துவரும் நிலையில், ஸ்வீடன் அத்தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திக் கொண்டது.

தடுப்பூசி
தடுப்பூசி
author img

By

Published : Mar 17, 2021, 7:06 AM IST

உலகின் புகழ்பெற்ற மருத்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று அஸ்ட்ராஜெனெகா. இந்நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துவரும் நிலையில், அத்தடுப்பூசியின் பயன்பாட்டை ஸ்வீடன் தற்போது நிறுத்திக் கொண்டுள்ளது.

தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு ரத்த உறைவு போன்ற பின்விளைவுகள் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், ஸ்வீடன் இம்முடிவை எடுத்துள்ளது. இருப்பினும், அஸ்ட்ராஜெனெகா தயாரித்த தடுப்பூசியை பல நாடுகலும் தொடர்ந்து பயன்படுத்தியே வருகின்றன.

இந்த நிலையில், சர்வதேச ஒழுங்குமுறை மருந்து நிறுவனங்கள், தடுப்பூசி பாதுகாப்பாக உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ஸ்வீடன் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் வெளியிட்ட அறிக்கையில், "தடுப்பூசிப் பயன்பாட்டை நிறுத்திக் கொண்டது முன்னெச்சரிக்கை நடவடிக்கை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா தடுப்பூசி விநியோகத்தை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்க ஜெர்மனியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில், அஸ்ட்ராஜெனெகா தயாரித்த மருந்து உள்பட மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தடுப்பூசி பற்றாக்குறை உள்பட பல சிக்கல்களில் தவித்துவந்த ஐரோப்பிய நாடுகளுக்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி குறித்த நிபுணர் குழுவின் அறிக்கையை ஐரோப்பிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வுக்கு உட்படுத்தி இறுதி முடிவை எடுக்கவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.