அமெரிக்க உளவுத்துறை உலக நாடுகளை ரகசியமாக வேவு பார்த்ததை, 2010ஆம் ஆண்டு, பொது தளத்தில் வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே.
அரசு ரகசியங்களை வெளியிட்டு தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி அசாஞ்சேவை அமெரிக்கா வலைவீசி தேடியது. அமெரிக்காவிடமிருந்து தப்பித்த அசாஞ்சே லண்டனுக்குத் தப்பிச்சென்றார்.
இதனிடையே, 2010ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் அவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், அசாஞ்சேவை நாடுகடத்துமாறு ஸ்வீடன் அரசு, பிரிட்டனுக்கு 2012இல் வேண்டுகோள் விடுத்தது. எங்கு தன்னை நாடு கடத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் ஜூலியன் அசாஞ்சே, பிரிட்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து, அசாஞ்சே மீதான பாலியல் வழக்கு கைவிடப்பட்டது.
இதையும் வாசிங்க: இலங்கை அதிபர் இம்மாத இறுதியில் இந்தியா வருகை!
கடந்த ஏப்ரல் மாதம், அசாஞ்சேவுக்கு இனி தஞ்சம் அளிக்கமாட்டோம் என ஈகுவடார் அரசு விலகியது. பிறகு அசாஞ்சேவை பிரிட்டன் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஸ்வீடன் அரசு, அசாஞ்சே மீதான பாலியில் வழக்கை தூசி தட்டி மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், அசாஞ்சே மீதான பாலியல் வழக்கில் அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், இதன் காரணமாக அதனை கைவிடுவதாக ஸ்வீடன் அரசு அறிவித்துள்ளது.
ஸ்வீடனின் இந்த அறிவிப்பு அமெரிக்காவின் நாடு கடத்தல் விசாரணை தொடங்குவதற்கு வழிவகை செய்துள்ளது.
இதையும் வாசிங்க: டெல்லி காற்று மாசு - டைட்டானிக் ஹீரோ கவலை