மாஸ்கோ : கரோனா வைரஸ் மற்றும் டெல்டா வகை வைரஸ்களுக்கு எதிராக ஸ்புட்னிக் தடுப்பூசி 83 விழுக்காடு செயலாற்றுகிறது.
இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரத் துறை விடுத்துள்ள அறிக்கையில், “புதிதாக கண்டறியப்பட்ட வைரஸ் மாறுபாடுகளுக்கு எதிராக ஸ்புட்னிக் வி பாதுகாப்பாக இருப்பதை தரவு உறுதிப்படுத்துகிறது மற்றும் சிறந்த பாதுகாப்பு மற்றும் செயல்திறன் அளிக்கிறது.
மேலும், டெல்டா வகை வைரஸிற்கு எதிராக ஸ்புட்னிக் தடுப்பூசி 83.1 சதவீதம் செயல்திறன் கொண்டது மற்றும் தொற்று அபாயத்தை 6 மடங்கு குறைக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியா உள்பட 69 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஸ்புட்னிக் வி விநியோகம் பிரச்னை: விரைவில் சரியாகிவிடும் எனத் தகவல்