இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு, 1910களில் தென்னாப்பிரிக்காவில் சில காலம் இருந்தார்.
அப்போது அவர் பயன்படுத்திய தங்க முலாம் பூசிய பிரேம்களைக் கொண்ட மூக்குக் கண்ணாடி, தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் அக்கண்ணாடி 2.55 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
1910களில் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தில் காந்தி பணிபுரிந்தபோது, தனது மாமாவிடம் அந்த மூக்குக் கண்ணாடியை அவர் கொடுத்ததாகவும், தன் மாமா மூலம் அந்த மூக்குக் கண்ணாடி தனக்கு கிடைத்ததாகவும் கண்ணாடியை ஏல நிறுவனத்திடம் ஒப்படைத்த நபர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அந்நபர் அளித்த அனைத்து தகவல்களையும் சரிபார்த்த ஏலம் விடும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்ட்ரூ ஸ்டோவ், இத்தகவல்கள் அனைத்தும் உண்மையே என்று உறுதிபடக் கூறுகிறார்.
முன்னதாக, மகாத்மா காந்தியின் இந்தக் கண்ணாடி 14 லட்சத்திற்கு விற்பனையாகும் என்று ஏல உரிமையாளர்கள் மதிப்பிட்டனர். ஆனால், எதிர்பாராத வகையில் 2.55 கோடி ரூபாய்க்கு கண்ணாடி ஏலம் போன சம்பவம், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், காந்தியின் கண்ணாடி மூலம் கிடைத்த ஏலத்தொகையை தனது மகளுடன் பகிர்ந்து கொள்ளப்போவதாக அதனை கடைசி வரை பாதுகாத்து வைத்திருந்தவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'கரோனா பரவலில் தப்லீக் ஜமாத்தினர் பலிகடாவாக்கப்பட்டனர்' - உயர் நீதிமன்றம் காட்டம்