இந்திய துணைக் கண்டத்தில் (AQIS) அல்-கைதா ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மண்ட் மற்றும் காந்தஹார் மாகாணங்களிலிருந்து தாலிபானின் தலைமையின் கீழ் செயல்படுகிறது என்று ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கைதா மற்றும் அதனுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான பகுப்பாய்வு ஆதரவு மற்றும் தடைகள் கண்காணிப்புக் குழுவின் 26ஆவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் பங்களாதேஷ், இந்தியா, மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 150 முதல் 200 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கில் பிராந்தியத்தில் பதிலடி நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையிலான ஐ.எஸ்.ஐ.எல் செயல்பாட்டாளர்கள் உள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மே மாதம், இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.ஐ.எஸ், ஐ.எஸ்.ஐ.எல் அல்லது டேஷ் என்றும் அழைக்கப்படுகிறது) பயங்கரவாதக் குழு இந்தியாவில் ஒரு புதிய "மாகாணத்தை" நிறுவியதாகக் கூறியது. இது காஷ்மீரில் போராளிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
முன்னதாக, காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல்கள் அதன் கோரசன் மாகாண கிளை என்று அழைக்கப்பட்டன, இது "ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் அருகிலுள்ள நிலங்களை" உள்ளடக்கும் வகையில் 2015இல் அமைக்கப்பட்டது.