கரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளை ரஷ்யா உளவுத்துறையை சேர்ந்த கோஸி பியர் அமைப்பு திருட முயற்சிப்பதாக அமெரிக்கா,கனடா, பிரட்டன் ஆகிய மூன்று நாடுகள் குற்றஞ்சாட்டின. இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கரோனா தகவல் திருட்டு குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என பிரிட்டனுக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கெலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "இந்தக் கதையை நான் நம்பவில்லை, அதில் எந்த அர்த்தமும் இல்லை. பிரட்டன் ஊடகங்கள் மூலம் ஹேக்கர்கள் குறித்த செய்தியை அறிந்துகொண்டேன். கணிணியை ஹேக் செய்பவர்களை இந்த நாட்டை சேர்ந்தவர்கள் எனக் கூறுவது கடினமானது. இதேபோல், பிரிட்டிஷ் தேர்தலில் ரஷ்யாவை சேர்ந்தவர் போட்டியிட அரசு ஆவணங்களை திருட முயன்றதாகவும் பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறியிருந்தார். ஆனால், பிரிட்டன் உள்நாட்டு அரசியலில் தலையிட எங்கள் நாட்டினருக்கு துளிக்கூட விருப்பம் இல்லை" எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.