ரஷ்ய நாட்டின் வெளியுறவுத் துறை ஆப்கன் மீட்பு நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவரை 500க்கும் மேற்பட்டோரை ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யா மீட்டுள்ளது.
அதில், ரஷ்யர்களுடன் சேர்த்து உக்ரைன், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாட்டு மக்களும் மீட்கப்பட்டனர். ரஷ்ய அதிபர் விளாதிமர் புதினின் உத்தரவின்படி, நான்கு ராணுவ விமானங்கள் காபூலுக்குச் சென்றது.
ஒவ்வொரு விமானத்திலும் சுமார் நூறு பேர் என ஆப்கனிலிருந்து மீட்கப்பட்டனர். இடையில் இந்த விமானங்கள் கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிறுத்தப்பட்டு அந்நாட்டுக் குடிமக்களை இறக்கிவிட்டுச் சென்றது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிய பின் தாலிபான் ஆட்சியை கைப்பற்றியது. தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து ஆப்கனில் அசாதாரண சூழல் நிலவுவதால் அங்கு குடியிருந்த வெளிநாட்டவர் சொந்த நாட்டுக்கு திரும்பிவருகின்றனர். இந்த மீட்பு நடவடிக்கையை சர்வதேச நாடுகள் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன.
இதையும் படிங்க: துபாயின் அடுத்த பிரமாண்டம் 'உலகின் மிக உயர ராட்டினம்'