ETV Bharat / international

பிரிட்டனில் மூன்று கட்டங்களாக தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு

லண்டன்: பிரிட்டனில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன.

Reopening UK: Johnson's 3-stage plan leaves future in limbo

author img

By

Published : May 14, 2020, 12:36 AM IST

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்தும், ஊரடங்கில் விதிக்கப்படவுள்ள தளர்வுகள் குறித்தும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வரும் ஜூன் மாதம் முதல் பிரிட்டனில் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் திறக்கபடவுள்ளன என்றார். இதற்காக நிபந்தனை திட்டங்களை அமல்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

உலக நாடுகளில் மிகப்பெரியதான பிரிட்டனில் மக்கள் வேலையிழந்தும், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீடுகளிலேயே முடங்கியிருப்பதும் கவலையளிக்கிறது என்ற அவர் ஊரடங்கினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் இதுவல்ல என்றபோதிலும், நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை நிபந்தனைகளுடன் அமல்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்த தகவல்களை ஐம்பது பக்க அளவில் வெளியிட்ட அரசு, மக்கள் முகக் கவசங்களை கட்டாயம் அணியவேண்டும், பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கவேண்டும், தகுந்த இடைவெளிகளை கடைபிடிப்பதை உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஊரடங்கை தளர்த்துவது குறித்து பேசிய அவர், பிரிட்டனில் மூன்று கட்டங்களாக ஊரடங்கினை தளர்த்தவிருப்பதாகவும், முதல்கட்டமாக ஜூன் மாதத்தில் பள்ளிகள், கடைகள் உள்ளிட்டவை படிப்படியாக திறக்கப்படும். மக்கள் அதிகளவில் கூடும் சில முக்கிய இடங்கள் திறக்கப்படும், பூங்கா, கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றார். மேலும், கோல்ஃப் மைதானங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

புதிய வைரஸ் தொற்று பாதிப்புகள் ஏற்படவில்லை எனில், ஜூலை மாதத்தில் படிப்படியாக உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள், பார்கள், முடி திருத்தும் நிலையங்கள், அத்தியாவசிய தேவைகளின்றி செயல்படும் பிற வணிக நிறுவனங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதேசமயம், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு ஊரடங்கு தளர்வின் போது அதிகரித்தால் அனைத்து தளர்வுகளும் முற்றிலுமாக நீக்கப்படும் எனவும் கூறினார்.

பிரிட்டனிற்கு விமானம், கப்பல் மூலம் வரும் வெளிநாட்டினர், உள்நாட்டினர் என யாராக இருந்தாலும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்ற அவர், அயர்லாந்து, பிரான்சிலிருந்து வரும் பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஊரடங்கினை தளர்த்துவது வரவேற்கப்படவேண்டிய ஒன்றாயினும், மக்களுக்கு தற்போது நம்பிக்கையும், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்த தெளிவு மட்டுமே தேவை என்றும் அவை மக்களிடம் குறைந்தளவே உள்ளன எனவும் எதிர்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், போரிஸ் ஜான்சனை விமர்சித்துள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தியப்பின் முதல் முறையாக வேலைக்குத் திரும்பிய கட்டுமானத் தொழிலாளர் பீட்டர் ஒசு, கரோனா வைரஸ் அச்சுறுத்தலின்றி மக்கள் தகுந்த இடைவெளிகளைக் கடைபிடிக்காமல் நெருங்கி அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு தான் மிகுந்த பதற்றமடைந்ததாகக் கூறினார். ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல் நாளே மக்களின் செயல்பாடு இப்படி இருக்கையில், முழுவதுமாக தளர்த்தப்பட்டால் ஏற்படும் நிலை என்ன என மிகுந்த கவலையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள அரசுகள் போரிஸ் ஜான்சனின் ஊரடங்கு தளர்வுகள் குறித்த கருத்துகளுடன் முற்றிலும் வேறுபடுகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்து ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

பிரிட்டனில் கரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது அமெரிக்காவை அடுத்து கரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாக கொண்ட இரண்டாவது நாடாகும்.

இதையும் படிங்க: இந்தியாவைப் போல் இங்கிலாந்திலும் 'கரோனா கைத்தட்டு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.