உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்பாக உக்ரைன் நாட்டு அதிபர் விளாதிமோர் செலன்ஸ்கி அமெரிக்க செய்தி ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் பேசுகையில், "ரஷ்ய அதிபர் புதினுடன் நான் பேச்சு வார்த்தை நடத்த தயார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்லி அடையும் பட்சத்தில் இது மூன்றாம் உலகப்போரில் முடியும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளார்.
உக்ரைன் நாடு தற்போது ராணுவ சட்டத்தில் இயங்கிவருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அந்நாட்டில் ராணுவ சட்டம் அமலில் உள்ள நிலையில், அதை மேலும் நீட்டித்து அந்நாட்டின் நாடாளுமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரு நாடுகளுக்குமான போர் இன்னும் ஓயாமல் உள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு பிற ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் வலியுறுத்திவருகின்றன.
ஆனால், ரஷ்யா தனது படையெடுப்பை நிறுத்தாமல், தொடர்ந்து முன்னேறிவருகிறது. அத்துடன், நீண்ட தூரம் இலக்கை தாக்கும் ஹைப்பர்சோனிக் ரக விமானங்களை பயன்படுத்தி உக்ரைனை தாக்கிவருகிறது. பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய இந்த போர் நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உக்ரைன் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசா?