கறுப்பின மக்களுக்காக குரல் கொடுத்தவரும், மனித உரிமை செயல்பாட்டாளரும், ஆப்ரிக்க அமெரிக்க அமைச்சருமான மால்கம் எக்ஸின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை லெஸ் பெய்ன் (Les Payne) எழுதியிருக்கிறார். புலிட்சர் விருது பெற்ற புலனாய்வு ஆராய்ச்சியாளரும், பத்திரிகையாளருமான லெஸ் பெய்ன் புத்தகம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
'த டெட் ஆர் அரைஸிங்: த லைப் ஆப் மால்கம் எக்ஸ்' (The Dead Are Arising: The Life of Malcolm X) என்னும் இந்தப் புத்தகத்தை பெய்னின் மகள் தமாரா பெய்ன் இணைந்து எழுதியிருக்கிறார்.
'இனவெறியின் தடைகளை கடந்துவர இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவார்கள் என்று மால்கம் எக்ஸ் தன்னை பின்பற்றுபவர்களை ஹார்ஃபோர்டில் கண்டபோது சொன்ன கூற்றினை' மையமாக வைத்து, இந்தப் புத்தகத்தின் தலைப்பு வைக்கப்பட்டதாக, புத்தக விளக்கவுரை கூறுகிறது.
நிஜ வாழ்க்கையில் மால்கம் எக்ஸை சந்தித்தவர்களிடம் உரையாடி, பேட்டி கண்டு அதன் பிறகு, 1990ஆம் ஆண்டு இந்தப் புத்தகத்தை பெய்ன் எழுதியுள்ளார். இது அவரின் வெகு நாள் கனவும் கூட. சுமார் 30 ஆண்டுகளாக மால்கம் எக்ஸின் நண்பர்கள், உறவினர்கள், சிறை நண்பர்கள் எனப் பலரிடம் பேட்டி எடுத்து, இந்தப் புத்தகத்தை பெய்ன் எழுதியிருக்கிறார்.
2018ஆம் ஆண்டு அவரின் மகள் தமாரா பெய்ன் இந்தப் புத்தகத்தை நிறைவு செய்துள்ளார். 608 பக்கங்களைக்கொண்ட நூலை பென்குயின் பதிப்பகம் வெளியிடுகிறது.
இதையும் படிங்க... புலிட்சர் விருது பெற்றவர்கள் திருடர்கள் - செய்தியாளர்களை விமர்சித்த ட்ரம்ப்