பானாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரிஃப், சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள், நவாஸ் ஷெரிஃப்புக்கு எதிராக அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் பேட்ரியாட்டிக் ஃப்ராண்ட் ( Pakistan Patriotic Front) என்னும் அமைப்பை நிர்வகித்து வரும் தரீக் மெஹ்மூத் என்பவரின் தலைமையில் சுமார் 40 பேர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், "நவாஸ் ஷெரிஃப்பை சுட்டுக் கொல்லுங்கள்" என்பன உள்ளிட்ட கண்டன முழுக்கங்களை எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர், தலிபான்களைப் ( பயங்கரவாத அமைப்பு) போன்று ஷெரிஃப் தங்கியிருக்கும் அடுக்குமாடி கட்டடத்தை குண்டு வைத்து தகர்த்தெறியுங்கள் என ஆவேசத்துடன் கூறினார்.
நாவஸ் ஷெரிஃப், லண்டனில் உள்ள அவரது மகன் ஹாசன் நவாஸுக்கு சொந்தமான இல்லத்தில் (ஃபாளட்டில்) கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் தங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பதவி நீக்க விசாரணையில் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை - ட்ரம்ப் குற்றச்சாட்டு