உலக வரலாற்றில் இளவரசி டயானா பெயர் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. டயானா தன்னுடைய அழகால் பலரையும் தன்பக்கம் ஈர்த்தவர். 1997ஆம் ஆண்டு டயானாவின் மரணச் செய்தி ஏராளமான மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இளவரசி டயானா 1985ஆம் ஆண்டு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹாலிவுட் நடிகர் ஜான் ட்ரோவல்டாவுடன் நடனம் ஆடியபோது, அவர் அணிந்திருந்த நீலநிற வெல்வெட் கவுன்தான் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. இத்துடன், டயானாவின் மேலும் இரண்டு உடைகளும் ஏலத்திற்கு விடப்படுகின்றன.
டயானாவுக்கு மிகவும் பிடித்தமான நீலநிற வெல்வெட் கவுன் இதற்கு முன்பு இரண்டு முறை ஏலத்திற்கு வந்துள்ளது. 1997ஆம் ஆண்டு டயானா இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் தொண்டு நிறுவனங்களுக்காகப் பணம் திரட்டும் வகையில் ஏலம் விடப்பட்டது. பின்னர், 2013ஆம் ஆண்டு பிரிட்டன் தொழிலதிபர் 2 கோடியே 22 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கு கவுனை ஏலம் எடுத்தார்.
தற்போது, கெர்ரி டெய்லர் நிறுவனம் சார்பாக நடைபெறும் 'பேஷன் ஃபார் ஃபேஷன்' (passion for fashion) ஏலத்தில் மூன்றாவது முறையாக டயானாவின் நீலநிற கவுன் ஏலத்திற்கு விரைவில் வரப்போகிறது. இதன் ஆரம்ப விலையாக ரூ. 3 கோடியே 24 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறை நீலநிற கவுனை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: 'என்னடா இது தங்கத்துக்குப் பதிலா தக்காளி' - பாகிஸ்தானில் விநோதத் திருமணம்!