ETV Bharat / international

போரிஸ்-மைக் பாம்பியோ சந்திப்பு: சீனாவுக்கு எதிராக கூட்டணி? - ஹாங்காங் சீனா புதிய சட்டம்

லன்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ சந்தித்து சீனா தொடர்பாக முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Mike Pompeo
Mike Pompeo
author img

By

Published : Jul 22, 2020, 11:50 AM IST

பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மேற்கத்திய நாடுகளுக்கு சீனாவுக்கும் இடையே பனிப்போர் நிலவிவரும் தற்போதைய சூழலில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மைக் பாம்பியோ, சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். குறிப்பாக கரோனா வைரஸ் விகாரத்தில் சீனாவின் செயல்பாடு, ஹாங்காங் விவகாரத்தில் அந்நாடு மேற்கொள்ளும் சர்வாதிகாரப் போக்கு ஆகியவை குறித்து மைக் பாம்பியோ கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்தார்.

உலக நாடுகள் பலவற்றுக்கு சீனா அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், அந்நாட்டை எதிர்கொள்ள ஒரு கூட்டணி அமைக்க முடியும் என நம்புவதாக மைக் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் சீனா புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ள நிலையில், அதற்கு எதிராக பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள், ஹாங்காங்குடன் மேற்கொண்ட Extradition (வெளிநாட்டுக் குற்றவாளிகளை ஒப்படைத்தல்) ஒப்பந்தத்தை ரத்துசெய்தன.

இதையும் படிங்க: ஹஜ் யாத்திரை செல்ல எத்தனை பேருக்கு அனுமதி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.