போலந்தின் வார்சா சோபின் விமான நிலையத்தில் உள்ள விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் ரத்துசெய்யப்பட்டன.
பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்றுவருகிறது.
கிடைத்த தகவலின்படி, வெடிகுண்டு மிரட்டலானது இஸ்தான்புல்லிலிருந்து வார்சாவிற்கு வந்த ஒரு துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தை குறிவைத்துதான் வந்திருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் காவலர்கள் மீது தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு