இந்த மருத்துவமனையில் 84 வயதான முதியவர் ஒருவருக்கும், கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் மருத்துவனைக்கு சென்ற அவரின் வயது முதிர்ந்த மனைவி, தனது கணவரை ஆரத்தழுவி முத்தமிட்டார்.
இந்தக் காட்சி காண்போரின் கண்களில் நீரை வரவழைத்தது.
இதேபோல் அந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் குடும்பத்தினர் பலரும், கையுரை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து மகிழ்ந்தனர்.
இது கரோனா நோயாளிகளுக்கு புது தெம்பை கொடுத்தது.
ஸ்பெயின் நாட்டில் இரண்டு லட்சத்து 46 ஆயிரத்து 752 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 300 ஆக உள்ளது.
இதையும் படிங்க: நாஜி படைகளை வீழ்த்தியதற்கு ரஷ்ய அதிபர் பெருமிதம்