இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரட்டை மனப்பான்மை கொண்டவர் என்றும் உய்கர் இஸ்லாமியர்களிடம் சீனா எவ்வாறு நடந்துகொள்கிறது என்பது அவருக்கு தெரியும் எனவும் கூறினார். ஆனால் அதைப்பற்றி எதுவும் வாய்திறக்காமல் சீனா என்ன நிலைபாட்டில் இருக்கிறதோ அதையே இவரும் பின்பற்றுவார், இது என்ன ஒரு கேவலம் என்றார்.
மனித உரிமைகளின் வன்முறைவாதி பாகிஸ்தான் என்றும் சீனா உண்மையை மறைப்பதாகவும் சாடினார். காஷ்மீர் விவகாரத்தைத் தூக்கிப்பிடிக்கும் இம்ரான்கான், உய்கர் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி விவகாரம் தலைதூக்கும்போது மட்டும் தனது கண்களை மூடிக்கொள்வார் என்று கடுமையாக சாடினார். இஸ்லாமாபாத் வாயை மூடிக்கொண்டு பீஜிங்கின் சிறுபான்மையினருக்கு எதிரான நிலைபாட்டை பின்பற்றுவதாகவும் குற்றஞ்சாட்டினார். இம்ரான்கான் காஷ்மீர் மக்களுக்கான தூதர் போல நடந்துகொள்வதாகவும், அவரது இரட்டை மனப்பான்மையால் அவர் நிச்சயம் வருந்துவார் என்றும் கூறினார்.
மத்திய ஆசியாவில் வசிக்கும் உய்கர் மொழி பேசும் ஒரு மக்கள் இனமே உய்கர் ஆகும். இன்று இந்த மக்கள் பெரும்பான்மையாக சீனாவின் மேற்கில் சிஞ்சியாங் பகுதியில் வசிக்கின்றனர். பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ரஷ்யா, கசகிஸ்தான் போன்ற நாடுகளிலும் சில உய்கர் மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்களுக்கு சீன அரசு போதிய முக்கியத்துவம் அளிக்காமல் உரிமையை பறிப்பதாக அவர்களுக்கான பிரதிநிதியாக விளங்கும் உலக உய்கர் காங்கிரஸ் அமைப்பு குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.