ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்து, அம்மாநிலத்தை 2 ஒன்றிய பிரதேசங்களாகப் பிரித்தது மத்திய அரசு. இதனையடுத்து மாநிலம் முழுவதிலும் பரபரப்பானச் சூழல் நிலவியதால் கடும் கட்டுபாடுகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டது. மேலும், கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் வீட்டில் சிறை வைக்கப்பட்டனர். இதுமட்டுமல்லாமல் தொலைபேசி, இணையதளம் என அனைத்தும் முடக்கப்பட்டது.
இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன், நேற்று பிரிட்டன் வாழ் பாகிஸ்தானியர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், காஷ்மீர் விவகாரத்தினையொட்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கொடியை ஏந்தியபடி இந்தியத் தூதரகம் நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களுடன் பிரிட்டன் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
மேலும், காஷ்மீர் விடுதலை முழக்கம் எழுப்பியவாறு இந்தியத் தூதரகம் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் தூதரக அலுவலகக் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. மேலும் முட்டை, காலி தண்ணீர் குப்பிகளையும் வீசினர். கண்ணாடி சேதமடைந்த புகைப்படத்தை இந்தியத் தூதரகம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “லண்டனில் உள்ள இந்திய தூதரகம் வெளியே நேற்று செப்டம்பர் 3ஆம் தேதி மற்றுமொரு வன்முறை எதிர்ப்பு. இதில் வளாகத்திற்குச் சேதம் ஏற்பட்டது” என பதிவிட்டிருந்தது.
-
Another violent protest outside the Indian High Commission in London today, 3 September 2019. Damage caused to the premises. @foreignoffice @UKinIndia @MEAIndia @DominicRaab @DrSJaishankar @PMOIndia @tariqahmadbt pic.twitter.com/2sv0Qt1xy8
— India in the UK (@HCI_London) September 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Another violent protest outside the Indian High Commission in London today, 3 September 2019. Damage caused to the premises. @foreignoffice @UKinIndia @MEAIndia @DominicRaab @DrSJaishankar @PMOIndia @tariqahmadbt pic.twitter.com/2sv0Qt1xy8
— India in the UK (@HCI_London) September 3, 2019Another violent protest outside the Indian High Commission in London today, 3 September 2019. Damage caused to the premises. @foreignoffice @UKinIndia @MEAIndia @DominicRaab @DrSJaishankar @PMOIndia @tariqahmadbt pic.twitter.com/2sv0Qt1xy8
— India in the UK (@HCI_London) September 3, 2019
இந்த பதிவிற்கு டிவிட்டரில் பதிலளித்த லண்டன் மேயர் சாதிக் கான், இது “ஏற்றுக்கொள்ள முடியாதது. இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இங்கு சமீபத்தில் அரங்கேறியிருக்கும் இரண்டாவது வன்முறை இது என்பது குறிப்பிடத்தக்கது.