கரோனா பாதிப்பின் தாக்கம் சர்வதேச அளவில் சுகாதார சிக்கலுடன் சேர்த்து பொருளாதரா சிக்கலையும் தீவிரப்படுத்திவருகிறது. உலகம் முழுவதும் போக்குவரத்துத் துறை முற்றிலும் முடங்கியுள்ளதால் கச்சா எண்ணெய் தேவை வெகுவாக குறைந்துள்ளது.
உலக நாடுகளின் பொருளாதரத்தில் பெரும் பங்காற்றும் எண்ணெய் பொருளாதாரம் இதன் காரணமாக ஆட்டம் கண்டுள்ளது. ரஷ்யா, சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி நாடுகள் இந்த தாக்கத்திலிருந்து தப்பிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டுவருகின்றன.
இந்நிலையில், இந்தச் சிக்கலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள ஒபேக்(OPEC) எனப்படும் சர்வதேச எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பு காணொலி மூலம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தின.
இந்தக் கூட்டத்திற்கு, அமைப்பின் தலைவர் முகமது அர்காப் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் பேசிய அவர், “சர்வதேச எண்ணெய்ச் சந்தை நகர்வுகளை கூர்ந்து கண்காணித்துவருகிறோம். தேவையான நேரத்தில் அனைத்து நாடுகளின் நலன்களும் பாதுகாக்கும்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கான நிவாரணம் ரூ.15,000ஆக அதிகரிக்க வேண்டும் - எம்.எஸ். சுவாமி நாதன்