ஜெனீவா: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் என்று மக்களிடையே பீதியை கிளப்பியது. இந்த தொற்றுகளும் ஓய்ந்த நிலையில், ஒமைக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் வெறும் 2 வாரத்தில் 100 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவில் கூட கடந்த வாரத்தில் 100 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வாரத்தின் இடையில் 781 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80 விழுக்காடு வேகமாக பரவிவருகிறது.
இதனிடையே, உலகம் முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அந்த வகையில், அமெரிக்கா, பிரிட்டனில் கரோனா தொற்று பாதிப்பு நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு உறுதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு, ஒமைக்ரான் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. உலகளவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. எனவே மக்கள் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரேலில் தீயாய் பரவும் ஒமைக்ரான்