இந்தியாவின் பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை மோசடியாக கடன் பெற்றது கடந்த 2018ஆம் ஆண்டு அம்பலமானது. மேலும், அவர் மீது மோசடி புகார்கள் எழுந்துவந்த நிலையில், இந்தியாவிலிருந்து தப்பியோடி லண்டன் நகரில் தஞ்சம் புகுந்தார்.
அவரை இந்தியா கொண்டுவரும் முயற்சியில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நீரவ் மோடியை இந்தியா மீட்டுவருவது தொடர்பாக வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் இன்று (செப். 7) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசின் உள்துறை அமைச்சர் ப்ரீத்தி பட்டேல் ஒப்புதல் அளித்துள்ளார். நீரவ் மோடியை இந்தியா அழைத்துவருவதற்கான முக்கிய ஆவணங்களை அந்நாட்டின் நீதிமன்றத்தின் முன்வைத்துள்ள அதிகாரிகள் இந்த வழக்கில் விரைவில் சாதகமான தீர்ப்புவரும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கூட்டாக கரோனா தடுப்பூசி சோதனை மேற்கொள்ளும் ஈரான், ரஷ்யா!