ETV Bharat / international

ஃபிரான்சில் 46 உருமாற்றம் கொண்ட புதிய வைரஸ் கண்டுபிடிப்பு!

ஃபிரான்சில் 46 உருமாற்றங்களைக் கொண்ட புதிய உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

new-virus-discovery-with-46-mutations-in-france

author img

By

Published : Jan 4, 2022, 3:46 PM IST

Updated : Jan 5, 2022, 7:07 AM IST

கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெள்ள மெள்ள இயல்பு வாழ்க்கைத் திரும்பிவந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் என்று மக்களிடையே பீதியைக் கிளப்பியது.

இந்தத் தொற்றுகளும் ஓய்ந்த நிலையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. தென் ஆப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் தொற்று, இரண்டு வாரத்தில் 100 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. இந்தியாவில் இரண்டு வாரங்களாக வேகமாகப் பரவிவருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவருகிறது. ஒமைக்ரான் தொற்று, டெல்டா வைரசைவிட அதிவேகமாகப் பரவிவருகிறது. உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிவருகிறது.

இதனால், பல நாடுகளில் அடுத்த கரோனா அலையின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஃபிரான்ஸ் நாட்டில் உருமாறிய புதிய வகை கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

46 உருமாற்றம் கொண்ட புதிய வைரஸ்

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமிரோனிலிருந்து வந்த பயணிக்கு முதன்முறையாக இந்த உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் 12 பேருக்கு இந்த வகை கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது ஒமைக்ரானைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இது 46 உருமாற்றங்களைக் கொண்டுள்ளதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், ஐ.ஹெச்.யு. பி.1.640.2 என இந்தக் கரோனா வைரசுக்குப் பெயரிட்டுள்ளனர்.

ஆனால், ஃபிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய வகை கரோனா பிற நாடுகளில் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை.

இதையும் படிங்க : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கரோனா பாதிப்பு!

Last Updated : Jan 5, 2022, 7:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.