மார்பக புற்றுநோய் இருக்கும் பெண்களை பொறுத்தவரையில், அவர்களுக்கு மேற்கொள்ளும் பரிசோதனையில் 70 விழுக்காடு ஆஸ்ட்ரோஜன் பாசிட்டிவ், ஹர் 2 நெகட்டிவ் கண்டறியப்படும். அதனடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும்.
இந்நிலையில், லண்டனில் உள்ள மார்ஸ்டன் மருத்துவனையில் நடத்திய ஆய்வில், மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு அல்கோரிதம் (Algorithm) முறையில் படிப்படியாக நோயின் நிலையை கண்டறிந்து, அதைக் கட்டுப்படுத்த கீமோதெரபி அளிக்கலாம் அல்லது உடனடி அறுவை சிகிச்சை தேவைப்படும் பெண்களுக்கு அதற்கேற்ப சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய் கட்டியை அகற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உச்சத்தை தொடும் கோவிட்-19 பாதிப்புகள் : கதி கலங்கி நிற்கும் பாகிஸ்தான் அரசு!