அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின் பல நாட்டு தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடிவருகிறார். முதலில் தனது அண்டை நாடுகளான மெக்ஸிகோ மற்றும் கனடா நாட்டு தலைவர்களிடமும், பின்னர் கூட்டணி நாடுகளான நேட்டோ (NATO) நாட்டு தலைவர்களுடனும் உரையாற்றினார்.
அடுத்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிடம் தொலைபேசியின் மூலம் உரையாடிய பைடன், தற்போது முக்கிய நட்பு நாடான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார்.
இந்த தொலைபேசி உரையாடலில், இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த உரையாடலில் ஈரான் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அந்நாடு தொடர்ந்து தனது அணு செறிவூட்டல் நடவடிக்கையை செய்துவருவது உலக அமைதிக்கு எதிரானது என நெதன்யாகு பைடனிடம் தெரிவித்துள்ளார். உலக பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
கோவிட்-19 காரணமாக இரு நாடுகளும் கடும் இழப்புகளைச் சந்தித்துள்ள நிலையில், அதிலிருந்து மீள வர்த்தக ரீதியான செயல்பாடுகளை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல இருவரும் உறுதிபூண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆப்கானில் ராணுவ தாக்குதல்; 11 தலிபான்கள் பலி