ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற பிரிட்டன் முடிவெடுத்தையடுத்து 2016 ஆம் ஆண்டு பிரதமர் தெரசா மே முயற்சியால் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆதரவு கிடைக்க பெற்றதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 2 முறை தாக்கல் செய்யப்பட்ட ஒப்பந்தம் தோல்வியை தழுவியது. இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான கால அவகாசத்தை பிற உறுப்பு நாடுகள் அனுமதியுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எந்த வகையான பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை ஆதரிப்பது என எம்.பிக்கள் நாளை வாக்களிக்க உள்ளார். இது எப்போது இல்லாத ஒரு நடைமுறையாகவே கருதப்படுகிறது.
இதற்கிடையே, எம்.பி க்களின் இந்த முடிவுக்கு தன்னால் உத்தரவாதமும் அளிக்க முடியாது என பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார். இந்த பிரெகஸிட் விவகாரத்தில் அரசு தோல்வியை சந்தித்துள்ளது என்றும் இந்த நடைமுறை வெற்றியடையும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் தொழிலாளர் கட்சி சேர்ந்த ஜெர்மி கார்பின் தெரிவித்துள்ளார்.