ETV Bharat / international

மது அருந்த சென்ற தாயால் குழந்தைகளுக்கு நேர்ந்த விபரீதம்

மதுவிருந்துக்குச் செல்லும் மோகத்தில் தாயார் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை நான்கு நாள்களுக்கு வீட்டிலேயே விட்டுச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

baby died
மது விருந்து
author img

By

Published : Jun 14, 2021, 11:01 AM IST

Updated : Sep 4, 2021, 10:22 PM IST

மாஸ்கோ: ரஷ்யாவில் ஜ்லோடாஸ்ட் (Jlotaust) பகுதியைச் சேர்ந்த 25 வயதான வோல்கா பஜிராவோ, தனது கணவரைப் பிரிந்து தனியாக வசித்துவருகிறார். இவர் தனது நண்பர்களுடன் மதுபான விருந்திற்குச் செல்வதற்காக, தனது 11 மாத மகனையும், மூன்று வயது மகளையும் வீட்டிலேயே பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

சுமார் நான்கு நாள்களாக, இரண்டு குழந்தைகளும் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்துள்ளனர். குழந்தைகளைப் பற்றிய எண்ணம் கூட இல்லாமல், சரக்கு தான் எல்லாம் எனப் பார்ட்டியில் தாயார் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டுள்ளார்.

தொடர்ந்து, நான்கு நாள்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்த வோல்கா, பசியால் 11 மாத குழந்தை உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், ஆபத்தான நிலையிலிருந்த 3 வயது மகளை, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இவ்விவகாரம் குறித்து குழந்தைகளின் பாட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வோல்கா கைதுசெய்யப்பட்டார். தாயின் கடமையைச் செய்யத் தவறியதற்காக, அந்நாட்டு நீதிமன்றம் வோல்காவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.

இதையும் படிங்க: ஆபாச பேச்சால் லட்சங்களை அள்ளிய மதன்... வெளிவருமா 18+ சேனலின் லீலைகள்?

Last Updated : Sep 4, 2021, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.