ETV Bharat / international

கோவிட்-19: இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு

ரோம்: இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நேற்று (மார்ச் 20) மட்டும் 627 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தைத் தாண்டியுள்ளது.

Italy's virus toll tops 4,000
Italy's virus toll tops 4,000
author img

By

Published : Mar 21, 2020, 8:28 AM IST

Updated : Mar 21, 2020, 1:31 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் சீனாவில் தற்போது வெகுவாகக் குறைந்துவருகிறது. இருப்பினும் இத்தாலி, தென் கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் மிகவும் மோசமாகியுள்ளது. நேற்று (மார்ச் 20) ஒரே நாளில் இத்தாலியில் 627 பேர் கோவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, வியாழக்கிழமை (மார்ச் 19) வைரஸ் தொற்றால் 475 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அந்நாட்டில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,032ஆக உயர்ந்துள்ளது.

கடந்த மூன்று நாள்களில் மட்டும் இத்தாலியில் 1,500-க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் முதியவர்கள் அதிகம் உயிரிழக்கிறார்கள் என்பதாலும் இத்தாலியில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும் உயிரிழப்புகள் அங்கு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உலகெங்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் 36.6 விழுக்காடு இத்தாலியில் மட்டும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஜெனீவாவிலுள்ள தொற்று நோய்கள் துறை இயக்குநர் மேட்டியோ பாசெட்டி கூறுகையில், "வைரஸ் தொற்று உள்ளவர்கள் தங்களுக்குத் தொற்று இருக்கிறது என்பது தெரியாமலேயே பிறருக்குப் பரப்புகின்றனர். இதுதான் பெரும் ஆபத்து.

இதனால், தற்போது கண்டறியப்பட்டுள்ள 40 ஆயிரம் வைரஸ் தொற்று என்பது உண்மையில் பல மடங்கு அதிகமாக இருக்கலாம்" என்று கூறினார்.

கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் பொதுமக்கள் ஒன்றுகூடவும் கடைகளைத் திறக்கவும் மார்ச் 25ஆம் தேதிவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீனாவால் நாம் அவஸ்தையை சந்திக்கிறோம் - ட்ரம்ப்

Last Updated : Mar 21, 2020, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.