ETV Bharat / international

கரோனாவால் ஏப்ரல் 3 வரை உற்பத்திகளுக்குத் தடைவிதித்த இத்தாலி! - கோவிட் 19

ரோம்: கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக இத்தாலியில் அத்தியாவசிய தேவையைத் தவிர மற்ற அனைத்து உற்பத்திகளுக்கும் ஏப்ரல் 3ஆம் தேதிவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Italy to shut all business activities
Italy to shut all business activities
author img

By

Published : Mar 23, 2020, 11:55 AM IST

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் சீனாவில் குறைந்தாலும் இத்தாலி, தென் கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, ஜப்பானுக்கு அடுத்து அதிக முதியவர்களைக் கொண்ட நாடாக இத்தாலி இருப்பதால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இத்தாலியில் இதுவரை இந்த வைரஸ் தொற்று காரணமாக 59 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (மார்ச் 22) ஒரே நாளில் 651 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 476ஆக உயர்ந்துள்ளது.

இது சனிக்கிழமை (மார்ச் 21) ஏற்பட்ட 793 உயிரிழப்புகளைவிடக் குறைவு. இது குறித்து இத்தாலியின் உள்நாட்டு பாதுகாப்பு சேவைப் பிரிவுத் தலைவர் ஏஞ்சலோ பொரெல்லி கூறுகையில், "உயிரிழப்புகள் முந்தைய நாளை ஒப்பிடும்போது ஞாயிற்றுக்கிழமை குறைந்துள்ளது.

இது வரும்காலங்களில் இன்னும் குறையும் என்று நம்புகிறேன். இருப்பினும் தற்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை யாரும் புறந்தள்ள வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வடக்கு இத்தாலியிலுள்ள மிலன் நகரம் இந்த வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட இடமாக இருக்கிறது. அந்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்ட கோவிட்-19 வைரஸ் தொற்றுகளில், சுமார் 30.4 விழுக்காடு இந்த மிலன் நகரிலிருந்து பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஞாயிற்றுக்கிழமை பதிவான உயிரிழப்புகளில் சுமார் 55.5 விழுக்காடு இத்தாலியில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாலி பிரதமர் கியூசெப் கான்டே, "உலகப் போர்களுக்குப் பின் மிக மோசமான ஒரு நிலைமையை இத்தாலி தற்போது சந்தித்துவருகிறது. இதை மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக ஏப்ரல் 3ஆம் தேதிவரை எந்த வகையான உற்பத்திகளுக்கும் அனுமதியில்லை. நாட்டின் அத்தியாவசிய தேவைகளுக்கான உற்பத்திகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: கரோனா எதிரொலி-முடங்கியது ருவாண்டா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.