இத்தாலி நாட்டை கொலை நடுங்கச் செய்யும் கரோனா தொற்று பாதிப்பால், ஒரே நாளில் 4,050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 812 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 1,739 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிப்பின் காரணமாக ஐரோப்பா கண்டத்தின் முதலாவது நாடாகவும், அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இத்தாலி உள்ளது.
இத்தாலியில் லோம்பார்டி பகுதி கோவிட்-19 வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக காணப்படுகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் இத்தாலியில் மந்த நிலையே நீடிக்கின்றன. இதே நிலை நீடித்து வந்தால் பாதிப்பை விட உயிரிழப்புகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரிக்கும் என தொற்று நோயியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில், 14,620 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1, 590 பேர் குணமடைந்துள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இத்தாலி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மூன்றாவது வாரமாக கடைப்பிடிக்கப்படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா - தனிமைப்படுத்தப்பட்ட இஸ்ரேல் பிரதமர்!