ETV Bharat / international

கரோனா தடுப்பூசி: மனித ஆய்வுக்கு உட்படுத்தும் இஸ்ரேல்!

ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதனை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தடுப்பூசி
தடுப்பூசி
author img

By

Published : Nov 2, 2020, 2:06 PM IST

ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க முயலும் நிலையில், அது மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டு ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டு மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஹடாஸா, ஷீபா ஆகிய மருத்துவ மையங்கள் மனித பரிசோதனை முயற்சியை தொடங்கியுள்ளது.

இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி மையம் தயாரித்த கரோனா தடுப்பூசியை வணிக படிப்பை மேற்கொள்ளும் 26 வயது இளைஞருக்கு மத்திய இஸ்ரேலில் அமைந்துள்ள ஷீபா மருத்துவமனை கொடுத்து ஆய்வு பரிசோதனையில் இறங்கியுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி, ஷீபா மருத்துவமனைக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதுதான். இது முக்கியத்துவம் வாய்ந்த நாள். தடுப்பூசி மனித ஆய்வுக்கு விடப்பட்டுள்ளது ஊக்கமளிக்கிறது" என்றார். அதேுபோல், ஜெருசலேமில் அமைந்துள்ள ஹடாஸா மருத்துவமனையில் 34 வயது தன்னார்வலருக்கு கரோனா தடுப்பூசி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலத்தில், 80க்கும் மேற்பட்டோ தன்னார்வலர்களுக்கு கரோனா தடுப்பூசி கொடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அடுத்து மூன்று வாரங்களில், தடுப்பூசி கொடுக்கப்பட்டவர்கள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டுள்ளதா என்பது ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். அடுத்து கட்ட மனித பரிசோதனை டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தனிமைப்படுத்திக்கொண்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.