ETV Bharat / international

முதலாம் உலகப் போரில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு பிரான்சில் அஞ்சலி!

author img

By

Published : Oct 26, 2020, 8:44 PM IST

பாரிஸ் : பிரான்சுக்கான இந்தியத் தூதர் ஜாவேத் அஷ்ரப், செனட்டர் ரெமி ஃபெராட், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மாக்செட் பிர்பகாஸ் உள்ளிட்ட பலர் இணைந்து முதலாம் உலகப் போரில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

rance
france

முதலாம் உலகப் போர் 1914ஆம் ஆண்டில் தொடங்கி நான்கு ஆண்டுகள் நீடித்தது. உலக அளவில் எட்டு மில்லியன் மக்கள் இதில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஜெர்மனிக்கும் நேச நாடுகளுக்கும் இடையில் ஒரு போர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர், போர் இறுதியாக 1918ஆம் ஆண்டு நவம்பர் 11இல் முடிவடைந்தது.

இந்நிலையில், இந்தப் போரில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை பிரான்சில் கோபியோ அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இது குறித்து பிரான்ஸ் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய கீதம் ஒலிக்க, பிரான்சுக்கான இந்தியத் தூதர் ஜாவேத் அஷ்ரப், செனட்டர் ரெமி ஃபெராட் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மாக்செட் பிர்பகாஸ், பிற பிரெஞ்சு அலுவலர்கள் ஆகியோர் இணைந்து உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்” எனக் குறிப்பிட்டிருந்தது.

முன்னதாக இன்று (அக்.26), பிரான்சுக்கான இந்தியத் தூதர் பாரிஸின் வருடாந்திர ஆசியா நவ் கலை கண்காட்சியை மியூசி கைமில் திறந்து வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.