இஸ்லாம் மதம் குறித்தும் முகமது நபிகள் குறித்தும் பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்று கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. இரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வகுப்பறையில் கேலிச் சித்திரங்களை காட்டிய காரணத்தால், ஆசிரியர் ஒருவர் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்
இதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டில் உள்ள தேவாலயத்தில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் கத்தியால் குத்தியதில் மூவர் உயிரிழந்தனர். கேலிச் சித்திரங்களை வெளியிட்ட செய்தி நிறுவனத்தினை கண்டித்து பிரான்ஸ் முழுவதும் தொடர் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட போதிலும் அதன் பேரில் நடக்கும் வன்முறை சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நினைத்ததை பேசி எழுதுவதற்கான கருத்துச் சுதந்திரத்தை நான் எப்போதும் ஆதரிப்பேன். இஸ்லாமியர்களின் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன்.
ஆனால், கேலிச்சித்திரம் குறித்த எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கேலிச் சித்திரம் வெளியிட்டது அரசு செய்தி நிறுவனம் அல்ல" என்றார்.