கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் சூழலில், இதனைக் கட்டுப்படுத்தவோ அல்லது சரிசெய்யவோ எந்த ஒரு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சி மையங்களுக்கு, இந்த கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பது சவாலான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மலேரியாவைக் குணப்படுத்தும் குளோரோகுயின், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கரோனா வைரஸ் தொற்றைக் குணப்படுத்தும் எனவும்; அதைப் பயன்படுத்தி தான் கரோனா நோயாளிகளை குணப்படுத்துவதாகவும் இந்திய மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அமெரிக்க போன்ற நாடுகள், இந்தியாவிடம் இருந்து குளோரோகுயின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்து, பயணப்பட்டு வரும் சூழலில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கரோனா வைரஸ் தொற்றைக் குணப்படுத்தும் மருந்து அல்ல என இங்கிலாந்து விஞ்ஞானி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மருந்து கரோனாவைக் குணப்படுத்துமா என்ற ஆராய்ச்சியில், இங்கிலாந்து அரசு இறங்கியுள்ளது. அதன்படி, இன்று முதல் மூன்று மாதங்களுக்கு பிரிட்டன், ஆக்ஸ்ஃபோர்டு(Oxford) பல்கலைக்கழக மருத்துவமனைகளில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டு வரும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேபோல், நோயாளிகளை துல்லியமாக கவனித்து வருவதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ஹேக்கர்கள் அட்டூழியம்