ETV Bharat / international

கோவிட்-19 2ஆம் அலை: பிரான்ஸ், ஜெர்மனி அரசுகள் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு - ஐரோப்பா கரோனா இரண்டாம் அலை

பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது.

Global COVID-19 tracker
Global COVID-19 tracker
author img

By

Published : Oct 30, 2020, 12:47 PM IST

உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதுவரை நான்கு கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்து 659 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 86 ஆயிரத்து 243ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 29 லட்சத்து 93 ஆயிரத்து 196ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் ஐந்து லட்சத்து 72 ஆயிரத்து 785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 180 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 92 லட்சத்து 12 ஆயிரத்து 767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 177 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நாள்தோறும் பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது. இதையடுத்து, பிரான்ஸ், ஜெர்மனி அரசுகள் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.