ETV Bharat / international

பிலிப்பைன்ஸில் மீண்டும் பொதுமுடக்கமா? - பிலிப்பைன்ஸில் மீண்டும் பொதுமுடக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Corona cases Uplift in Philippines
Corona cases Uplift in Philippines
author img

By

Published : Jul 6, 2020, 12:00 PM IST

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்துவருகிறது. இதுவரை 1 கோடியே 15 லட்சத்து 56 ஆயிரத்து 681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 5 லட்சத்து 36 ஆயிரத்து 776 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில், 65 லட்சத்து 35 ஆயிரத்து 492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இத்தொற்றுக்கு எதிரான மருந்து இன்னும் கண்டறியப்படாததால், பல நாடுகள் பொதுமுடக்கத்தை நீட்டித்துவருகின்றன. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சந்தித்துவருகின்றன.

பொருளாதாரப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கத்தில் சில தளர்வுகளை அறிவித்தன. ஆனால், அந்தத் தளர்வுகள் கரோனா வைரஸ் அதிதீவிர பரவலுக்கு வழிகோலியது.

பிலிப்பைன்ஸ் நாட்டிலும் இதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு 44 ஆயிரத்து 254 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டின் முக்கிய மருத்துவமனைகளான மணிலா, சீனா ஜெனரல் மருத்துவமனை ஆகியவை நிரம்பிவழிகின்றன.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் உள்துறைச் செயலர் எட்வார்டோ ஆனோ பேசுகையில், ''கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதால் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்புகள் உள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஊழல் வழக்குகளின் மைய புள்ளியாக திகழும் இஸ்ரேல் நாட்டு பிரதமரின் மகன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.