கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகளில் உலக நாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையிலும், பல இடங்களில் அடுத்தகட்ட பாதிப்பு அலை வீசத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அங்கு மீண்டும் பலகட்டங்களாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஜெர்மனி நாட்டில் வரும் 28ஆம் தேதி வரை பொது முடக்க கட்டுப்பாடுகள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொது முடக்கம் வரும் ஏப்ரல் 18ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் 16 மாநில ஆளுநர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய பின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜெர்மனியில் இதுவரை 26 லட்சத்து 78 ஆயிரத்து 262 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 75 ஆயிரத்து 418 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரேசில் அரசுக்கு ’அவரசம் கடிதம்’ எழுதிய பொருளாதார நிபுணர்கள்