ETV Bharat / international

கரோனா ஏற்படுத்திய பொருளாதார சரிவு: ஜெர்மனி நிதியமைச்சர் தற்கொலை

பிராங்பேர்ட்: கரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பால் மனமுடைந்த ஜெர்மனி நாட்டின் நிதி அமைச்சர் தாமஸ் ஸ்கெஃபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உலகத் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

German minister commits suicide
German minister commits suicide
author img

By

Published : Mar 30, 2020, 8:22 AM IST

கரோனா வைரஸ் பெருந்தோற்று உலகளவில் கிட்டத்தட்ட ஏழு லட்சம் பேரை பாதித்துள்ளது. பலரின் உயிரைக் காவு வாங்கிய இந்த வைரஸ், பொருளாதாரத்தையும் அசைக்கத் தொடங்கியுள்ளது.

பல நாடுகளில் கரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பு காரணமான அந்நாடுகளின் அரசுகளே அதிர்ந்துபோயுள்ளன. இந்நிலையில் கரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு காரணமாக மனமுடைந்த, ஜெர்மனியின் நிதியமைச்சர் தாமஸ் ஸ்கெஃபர் (54) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிராங்பேர்ட் நகரின் அருகே ரயில் பாதையில் சனிக்கிழமை நள்ளிரவு அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

தாமஸ் ஸ்கெஃபரின் மரணத்தை ஜெர்மனியின் ஆளுங்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக கூட்டணியின் பிரமுகர் வோல்கர் பஃபேர் உறுதிசெய்துள்ளார். தாமசின் மரணம் தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், அவரது இந்த முடிவு நம்பமுடியாததாக உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் பொருளாதார பாதிப்பு காரணமாக கடுமையான மனஉளைச்சலில் இருந்திருக்கிறார் என்பதை தற்போது தங்களால் உணர முடிகிறது எனவும் தெரிவித்துள்ளார். அவரது இழப்பு ஜெர்மனிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று வோல்கர் பஃபேர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட ஜஸ்டின் ட்ரூடோ மனைவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.